Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts
Sunday, January 5, 2014
Wednesday, January 1, 2014
மாபெரும் இரத்ததான முகாம்
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 7:49 PM |
பிரிவு:
இரத்ததானம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
மாபெரும் இரத்ததான முகாம்
பஹ்ரைன்
மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03.01.14) அன்று சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
மனித
உயிர் காக்கும் மகத்தான சேவைக்கு உங்கள் நண்பர்களுடன் அன்புடன் அழைக்கிறோம்.
ஒருவர் இரத்தம் கொடுப்பதனால் இன்னொருவர் அவருடைய இரத்தத்தின் மூலம் அல்லாஹ் நாடினால்
குணமடைவார். அப்படி குணமடையும் போது அவரை வாழவைத்தவர் போன்றவராவார்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும்
வாழ வைத்தவர் போலாவார். ( குர்ஆன் 5: 32 )
தொடர்புக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பஹ்ரைன் மண்டலம்.
38385740, 33776344, 39320142
Saturday, August 4, 2012
அவசர உதவி - இரத்த தானம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 1:49 AM |
பிரிவு:
இரத்ததானம்
மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Sunday, February 26, 2012
அவசர உதவி - இரத்த தானம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:15 PM |
பிரிவு:
இரத்ததானம்
மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Saturday, January 28, 2012
5வது மாபெரும் இரத்ததான முகாம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:26 PM |
பிரிவு:
இரத்ததானம்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக (27-01-2012) நேற்று வெள்ளிக் கிழமை மதியம் 3 மணி முதல் 7.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.
இதில் 97 சகோதர, சகோதரிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் மற்றும் மொழி பேதமின்றி அதிகமான சகோதரர்களும் கலந்து கொண்டு மனித நேயத்தை பகர்ந்தனர்.
இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Monday, August 29, 2011
நள்ளிரவில் பஹ்ரைன் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:37 AM |
பிரிவு:
இரத்ததானம்

நள்ளிரவு என்றும் பாராமல் அவசர ரத்ததானம் செய்த நம் சகோதரர்களை பாராட்டி, சல்மானியா மருத்துவமனை நமது ஜமாத்திற்கு கடிதம் ஒன்றையும் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!
....."எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”...... 5:32.
Tuesday, May 31, 2011
பஹ்ரைனில் நடந்த 4வது இரத்ததான முகாம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:29 PM |
பிரிவு:
இரத்ததானம்
அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சார்பில் 27-05-2011 வெள்ளிக் கிழமை காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது, இதில் 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத நன்பர் ஒருவர் தமிழகதில் நடைபெரும் இரத்ததானங்களைஅனைத்து சமுதாய மக்களுக்கு மத்தியிலும் மேலும் அதிகமாக சென்றடையுமாறு வழிவகை செய்யவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் டி.என்.டி.ஜே யினரின் செயல்பாட்டைக் கண்டு அவரும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்.
இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் டி.என்.டி.ஜே நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)






