Saturday, January 14, 2012

வாராந்திர நிகழ்ச்சி - 13-01-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 13-01-2012 அன்று நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள், “பெற்றோர்களை பேணுதல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவர் தமது உரையில்அல்லாஹ் தமது குர்ஆனில் பெற்றோர்களை பேண வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் அதற்கு நேர் மாற்றமாக எப்படியெல்லாம் செயல்படுகிறோம் என்பதை மிக அழகாக விளக்கி கூறினார்கள்.

மேலும் இதிலிருந்து விலகி அல்லாஹ்விற்கு பயந்த முஸ்லீம்களாக வாழ துஆ செய்து தமது உரையை முடித்தார்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

அதனை தொடர்ந்து பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் தஃப்ஸிர் வகுப்பில் தேர்வு நடைபெற்று, இதில் சிறந்த முறையில் தேர்வு எழுதிய சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதை அவர்களுடைய கணவன்மார்கள் பெற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 13-01-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், “அல்லாஹ்வின் 5 அருட்கொடைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 13-01-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி புதிய மர்க்கஸில் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 13-01-2012 அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.முபாரக் அவர்கள், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 7, 2012

ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி 06-01-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. M. S. சுலைமான் பிர்தெளஸி அவர்கள் "பிற மத கலாச்சாரமும் இன்றைய முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் இன்றைய கால கட்டத்தில் நாகரிகம் என்ற போர்வையில், எப்படியெல்லாம் பிற மத கலாச்சாரத்தை முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் பின்பற்றி வருகிறோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதிலிருந்து நமது முஸ்லீம்கள் விலக வேண்டும் என்றும், நாம் தான் இதை தெரியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் குழுமியிருந்த சகோதரர்களுக்கு அறிவுரை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

ஹித் கிளை - புதிய மர்க்கஸ் மற்றும் நிர்வாகம்

அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் தொய்வில்லாமல் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் புதிதாக மர்க்கஸ் ஆரம்பமானது.

இதில் நமது பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுத்து அதனை தொடர்ந்து நாம் இந்த புதிய மர்க்கஸ் உருவாக்கியதற்கான முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்கள்.

அதன் பிறகு ஹித் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இதில் நமது ஹித் கிளையை சேர்ந்த நமது சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் மூலம் அரபி இலக்கண வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 03-01-2012 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில்  நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... 

இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு மாத முதல் செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. 

Monday, January 2, 2012

பஹ்ரைன் மண்டல பொதுக்குழு

அல்லாஹ்வின் உதவியால், நேற்று (01-01-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நமது ஜமாஅத்திற்காக தலைமையில் சொந்த கட்டிடம் வாங்குவதற்காக நம்மாள் எந்த அளவில் பொருளாதார உதவி செய்ய முடியும் என்பதற்காகவே.
இதன் ஆரம்ப கட்டமாக, தாயத்திலிருந்து சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தொலைபேசி மூலமாக நமக்கு தற்போது ஏன் சொந்த கட்டிடம் தேவை? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றியெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் எளிய முறையில் நமது சகோதரர்களுக்கு விளக்கினார்கள். சகோதரர் ஆற்றிய உரையை தொடர்ந்து அதற்கு மேலும் தெம்பூட்டும் வகையில் அவரை தொடர்ந்து நமது மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் ஆற்றிய உரை அமைந்தது. இவர் தமது உரையின் ஆரம்பமாத்திரத்திலேயே நமது ஜமாஅத்தின் கொள்கை என்ன? இந்த கொள்கை எப்படி பட்ட கொள்கை? அல்லாஹ்வும் அவனது துதரும் காட்டித் தந்த அடிப்படையில் தான் உள்ளதா? என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேலும், இந்த கொள்கையை 1980களில் சொல்ல ஆரம்பித்து இன்று எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்து விளக்கினார். அதனை தொடர்ந்து நமது ஜமாஅத் எப்படிபட்ட வேலைகளை எல்லாம் செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குர்ஆன், ஹதீஸை சொல்கிறோம் என்று சொல்கின்றவர்களுக்கு மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எப்படிபட்ட சமுதாய பணிகளை செய்து வருகிறது, மேலும் நமக்கு என்று தனியாக சொந்த கட்டிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய பயங்கள் என்ன என்பதையெல்லாம் பட்டியலிட்டு காட்டினார்கள். இதை கேட்ட உடனேயே நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவுக்கு பொருளாதர உதவிகளை செய்கிறோம் என்றும், ஒவ்வோருவரும் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியும் என்றும் துண்டுச் சீட்டில் எழுதி பொருளாளர் அவர்களிடம் கொடுத்தனர். குழுமியிருந்த அனைத்து சகோதரர்களும் அல்லாஹ்விற்காக அழகிய கடன் வழங்கிய திருப்தியில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான் கூலியும் உண்டு. (அல் குர் ஆன் 57 - 11)
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்