Saturday, August 11, 2012

ரமலான் 2012 - நான்காம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் நான்காவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் கடந்த வாரங்களை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே.

இந்த ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.

ந்த ரமளான் மாத நான்காம் வாரத்தில் முஸ்லீம்களாக மரணிப்போம் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
  1. முஸ்லீம்களாக வாழ்வோம்
  2. முஸ்லீமின் இலக்கணம்
  3. இறைமறுப்பை தூண்டும் பெருமை
  4. நோய் நலம் விசாரிப்போம்
  5. பிறர் நலம் நாடுவோம்
  6. பெரும்பாவங்களும் தண்டனைகளும்
  7. நன்மையை ஏவி தீமையை தடுப்போம்
ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.

இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன்.

ரமாளான் 2012 - மூன்றாம் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். 

அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (09-ஆகஸ்ட்-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக சகோதரி. பெனாஸிர் அரஃபாத் ஆலிமா அவர்கள் முகஸ்துதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இவர்களின் இந்த உரையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை எத்தி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக கேள்வி இங்கே பதில் எங்கே? என்ற தலைப்பில், சகோதரர் அவர்கள் சில கேள்விகளை கேட்டு அதை மக்கள் மத்தியிலிருந்து பதில் பெற்று அது குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி சரியானாதா என்பதை விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளாவன,
  1. ஒரு முஸ்லீம் வட்டியில் ஈடுபடலாமா?
  2. மார்க்க விஷயங்களில் பிறருக்காக இணங்கி போகலாமா?
மற்றும் சில கேள்விகளை கேட்டு, மக்களின் கருத்துகளை பரிசிலித்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார்கள்.

இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து குர்ஆனின் 19ஆவது அத்தியாயமான, மரியம் என்ற அத்தியாயத்திலிருந்து 1 முதல் 40 வசனங்கள் வரை, சகோதர சகோதரிகளை 6 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுமார் அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

ரமளான் 2012 - நபி வழி உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் புனித மிக்க ரமளான் மாதத்தில் உம்ரா பயணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த உம்ரா என்ற அமலை குர்ஆன்  ஹதீஸ் அடிப்படையில் சரியாக செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நேற்று இரவு (09-08-2012) ”நபி வழி உம்ரா பயணம்” என்ற வகுப்பை பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதும் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

Saturday, August 4, 2012

தாயகம் செல்ல உதவி

நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு மாற்று மத சகோதரர் வேலைக்கு வந்த இடத்தில் சரியான வேலை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகினார். அவரது நிலைமையை அறிந்த பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 90.000) எடுத்து கடந்த 02-08-2012 அன்று ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது.

அவசர உதவி - இரத்த தானம்

அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த 01-08-2012 அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "O -ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின் மற்றும் செயல்பாடுகளின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களை அனுப்பி சகோதரரின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

ரமலான் 2012 - மூன்றாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் மூன்றாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் கடந்த வாரங்களை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே.

இந்த ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.

ந்த ரமளான் மாத மூன்றாவ வாரத்தில் மரண சிந்தனை என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
  1. மரணத்தை நினைவு கூறுவோம்
  2. மண்ணறை வேதனை
  3. மறுமையில் மனிதனின் நிலை
  4. நரக வேதனைகளை அஞ்சுவோம்
  5. மறுமையில் மனிதர்களின் புலம்பல்
  6. இறந்தவர்களும் இவ்வுலகமும்
  7. சொர்க்கத்தின் இன்பங்கள்
ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.

இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

ரமாளான் 2012 - இரண்டாம் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். 

அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (02-ஆகஸ்ட்-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக சகோதரி. அஹ்மது சஃபிகா உஜுஹுதீன் அவர்கள் அல்லாஹ்வின் கருணை என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரி. ஆதம் ஃபாத்திமா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

இவர்களின் உரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பது எது? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

இதில் சகோதரர் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் பால் மக்கள் அதிகமதிகம் வருகின்றனர். இவர்களை கவர்ந்து ஈர்க்கூடிய விஷயங்கள் எவை எவை என்பதை அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள். 

இவர்களின் இந்த உரையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை எத்தி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக கேள்வி இங்கே பதில் எங்கே? என்ற தலைப்பில், சகோதரர் அவர்கள் சில கேள்விகளை கேட்டு அதை மக்கள் மத்தியிலிருந்து பதில் பெற்று அது குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி சரியானாதா என்பதை விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளாவன,
  1. திருமண விஷயத்தில் இஸ்லாத்தில் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?
  2. தொழுகை விஷயத்தில் சிறு சிறு விஷயங்கள சமரசம் செய்யலாமா?

மற்றும் சில கேள்விகளை கேட்டு, மக்களின் கருத்துகளை பரிசிலித்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார்கள்.

இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுமார் அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 
திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 
TNTJ பத்திரிக்கைகள்