அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் மூன்றாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் கடந்த வாரங்களை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே.
இந்த ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ரமளான் மாத மூன்றாவ வாரத்தில் மரண சிந்தனை என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
- மரணத்தை நினைவு கூறுவோம்
- மண்ணறை வேதனை
- மறுமையில் மனிதனின் நிலை
- நரக வேதனைகளை அஞ்சுவோம்
- மறுமையில் மனிதர்களின் புலம்பல்
- இறந்தவர்களும் இவ்வுலகமும்
- சொர்க்கத்தின் இன்பங்கள்
.jpg)
இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன்.
0 comments:
Post a Comment