
அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (02-ஆகஸ்ட்-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.
இதில் ஆரம்பகட்டமாக சகோதரி. அஹ்மது சஃபிகா உஜுஹுதீன் அவர்கள் அல்லாஹ்வின் கருணை என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரி. ஆதம் ஃபாத்திமா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இவர்களின் உரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பது எது? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் சகோதரர் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் பால் மக்கள் அதிகமதிகம் வருகின்றனர். இவர்களை கவர்ந்து ஈர்க்கூடிய விஷயங்கள் எவை எவை என்பதை அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.
.jpg)
இவர்களின் இந்த உரையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை எத்தி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக கேள்வி இங்கே பதில் எங்கே? என்ற தலைப்பில், சகோதரர் அவர்கள் சில கேள்விகளை கேட்டு அதை மக்கள் மத்தியிலிருந்து பதில் பெற்று அது குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி சரியானாதா என்பதை விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளாவன,
- திருமண விஷயத்தில் இஸ்லாத்தில் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?
- தொழுகை விஷயத்தில் சிறு சிறு விஷயங்கள சமரசம் செய்யலாமா?
மற்றும் சில கேள்விகளை கேட்டு, மக்களின் கருத்துகளை பரிசிலித்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார்கள்.
இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுமார் அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment