Saturday, January 19, 2013

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 18-01-2013



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (18-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. ஃபாரூக் அவர்கள் "இன்னும் நாம் தயங்குவது ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, January 16, 2013

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 15-01-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நடத்தினார்கள். 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, January 12, 2013

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 11-01-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (11-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள் "இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 11-01-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (11-02-2013) நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானி அவர்கள், "சாதனையாளர்களின் மறுபக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 11-01-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (11-01-2013) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திட்டச்சேரி அலீம் அவர்கள், "மறைவான விஷயம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 5, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - வட்டி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (04-01-2013) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக வட்டி தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • வங்கிகளில் சேர்த்து வைக்கும் சேமிப்பு தொகைக்கு அதிகமாக கொடுக்கப்படும் தொகை வட்டியாகுமா?
  • வட்டி எப்பொழுது ஹராம் ஆக்கப்பட்டது?
  • அடைமனம் சம்பந்தமாக மார்க்கத்தின் நிலை என்ன? 
  • வியாபரத்திற்கு கொடுக்கப்படும் தொகை திரும்பப்பெருவது வட்டி கணக்கில் ஆகுமா?
  • பல்வேறு சமுதாய பிரச்சனைகளை களத்தில் காணும் தவ்ஹீத் ஜமாஅத், ஏன் வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் உதவி திட்டம் ஏற்படுத்த கூடாது?
என்பன போன்ற பல ஆக்கப்பூர்வமான வட்டி தொடர்புடைய கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, January 4, 2013

சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் – TNTJ vs மாதர் சங்கம்!



மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்
நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)
சன் நியூஸ் தொலைக்காட்சியில்
இன்ஷா அல்லாஹ்…..
05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
அதன் மறுஒளிபரப்பு
06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

காணத்தவறாதீர்கள்!

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்