Saturday, July 13, 2013

“அண்டை வீட்டார் நலம் பேணுதல்” – ஹித் கிளை இரண்டாம் நாள் பயான்


அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
 
அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம் நாளன்றும் (11-07-2013) ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “அண்டை வீட்டார் நலம் பேணுதல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

“பொறுமை” – ஹித் கிளை ரமலான் முதல் நாள் பயான்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஒரு கிளையாக செயல்பட்டு வரும் ஹித் பகுதியில், இந்த வருடம் முதல் முறையாக ஏக இறைவனின் பேருதவியால் ரமலான் மாதத்தில் இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து சிறப்பு பயான் நிகழ்ச்சிகளை, மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

அதன் ஒரு அங்கமாக, ஹித் கிளையில் ரமலான் மாதத்தின் முதல் நாளான்று (10-07-2013) இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதனை தொடர்ந்து சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் முதல் நாளானன்று அதன் உட்தலைப்பான “பொறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


இந்த நிகழ்ச்சியானது தினமும், இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு மார்க்க உரை நிகழ்த்தப்படுகிறது. தாங்கள் மற்றும் தங்களின் நண்பர்கள் அனைவரையும் இந்த மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து, இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இம்மை மற்றும் மறுமை ஈருலகிலும் வெற்றி பெற வேண்டுமாய் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன், ஹித். 

Saturday, July 6, 2013

"ரமளானில் அருள் பெறுவோம்" தலைமை பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (05-07-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், "ரமளானில் அருள் பெறுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"நோன்பு" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (05-07-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "நோன்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (05-07-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
 
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (இரண்டாம் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம் ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை நேற்று நடைபெற்ற வகுப்பின் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து இரண்டாம் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.  
 
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (முதல் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 02-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை முதல் பகுதியாக, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து முதல் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.  
 
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்