Sunday, June 19, 2011

வாரந்திர பயான் - 17-06-2011


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் நமது ஜமாத் ஆலோசகரான சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அவர்கள் தமது உரையில் திருமறைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள 5வது அத்தியாயமான அல் மாயிதாவின் 6வது வசனமாகிய,

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்

இந்த வசனத்தை மேற்கோள்காட்டி தொழுகைக்கு ஆயத்தமாகும் போது, குளிப்புக் கடமையாகும் போது எப்படி குளியலை மேற்கொள்வது  என்று அல்லாஹ் கற்றுத்தந்த படி செய்யுமாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து,
  • குளிக்கும் போது மனிதர்களுடைய பார்வையை விட்டு மறைத்துக் கொள்ளுதல், அறிவிப்பாளர்உம்முஹானி (ரலி) புகாரி – 280.
  • நிச்சயமாக ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான், அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி) புகாரி – 283.
  • இயற்கை மரபுகளான,
1.       விருத்தசேதனம் செய்வது
2.       மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது
3.       அக்குள் முடிகளை அகற்றுவது
4.      நகங்களை வெட்டிக் கொள்வது
5.      மீசையைக் கத்தரித்துக் கொள்வது
போன்ற விஷயங்கள் (அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி) புகாரி – 5889, 5891)
  • சிறுநீர் கழிக்கும் போது தமது உடலை மறைக்காமல் இருந்தவருக்கு கப்ர் வேதனை, அறிவிப்பாளர்இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் – 491)
போன்ற விஷயங்களை மேற்கொள் காட்டி உரையை நிகழ்த்தினார்.

இதை நமது பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கேட்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்