Sunday, June 26, 2011

பஹ்ரைன் மண்டல ஹித் கிளை பயான் (24-06-2011)

அல்லாஹ்வின் கிருபையால் நேற்று (24-06-2011) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் உள்ளஹித் சாரிடபள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்பஹ்ரைன் மண்டலம் இணைந்து நடத்திய மாபெரும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தொடக்க உரையாக நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்பூதீன் அவர்கள் அல்குர்ஆன் 4வது அத்தியாயமான அன்னிஸாவின் முதல் வசனம், மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
என்ற வசனத்தை ஓதி ஆரம்பம் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை என்ற தலைப்பில் உரையை தொடங்கினார்.
அதில் அல் பகராவின் 177வது வசனமான, “உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்”.
என்ற வசனத்தை கூறி உரை ஆரம்பித்தார்கள்.  
இதைத் தொடந்து, இஸ்லாத்தின் 5 தூண்களான,
1.      வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்றும் உறுதியாக நம்புதல்,
2.      தொழுகையை நிலை நாட்டுதல்
3.      ஜகாத்தை வழங்குதல்
4.      நோன்பு நோற்றல்
5.      ஹஜ் செய்தல்
ஆகிய காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) புகாரி – 8.
  • ஈமான் 60க்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. அதில் வெட்கம் என்பதும் ஒரு கிளையாகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி – 9.
  • தாம் விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பும் வரை முழுமையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி – 13.
  • 3 தன்மையுள்ளவர், ஈமானின் சுவையை உண்ர்ந்தவராவர். அவை, 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அடிகமாக நேசத்திற்குறியவர்களாவது, 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, 3. நெருப்பில் வீசப்படுவதை போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பி செல்வதை வெறுப்பது. அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி – 16.
போன்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களை மேற்கொள் காட்டி உரையை முடித்தார்
பின்பு நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்பூதீன் அவர்கள் நன்றியுரை கூறி, மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இதில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் பெரும் திரலாக கலந்து கொண்டு பயனடைந்தனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

2 comments:

Anonymous said...

Alhamdulillah., its was very good program.
Talking about basic and fundamental concept and believes in Islam...
May Allah(swt) Bless these people for continuous service of dawah

TNTJ-Bahrain on June 29, 2011 at 7:29 PM said...

Baarakallahu feek. Remember us in your precious supplications.

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்