Wednesday, November 21, 2012

பற்றி எரியும் காசா, இஸ்ரேலுக்கு பக்கபலமாக செயல்படும் அமெரிக்கா! (வீடியோ) (Gaza Photo Updated)

கடந்த 6 நாட்களாக பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேன் ராணுவம் குண்டு வீசி கொடூரமாண தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் காசா பகுதி எங்கும் தீ பற்றி எரிகின்றது.

பலியாகும் குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள்
ராக்கிட்டுகளை ஏவி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்து வருகின்றது. வீட்டில் துங்கிக் கொண்டிருந்தவர்கள், வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தவர்கள் , கடை தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டுவருகின்றனர்.
இன்று மதியம் வரை இஸ்ரேலின் தாக்குதலுக்கு 108 111 (செய்தியை எழுதி முடிப்பதற்குள் மேலும் 3 நபர்கள் கொள்ளப்பட்டுவிட்டனர்) நபர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதில் 27 பேர் பிஞ்சு குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேலின் அரக்க குணத்தையும் கொடூர பயங்கராவாத்தையும் காண்பிக்கின்றது. மேலும் இந்த தாக்குததில் 720 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பக்கபலமாக செயல்படும் ஒபாமாவின் அமெரிக்க அரசு
முஸ்லிம்களின் மீதனா இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஒபாமாவின் அமெரிக்க அரசு பக்க பலமாக உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்க தேர்தல்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றி பெற்றதும் தான் பயங்கரவாதி இஸ்ரேல் இதே போன்று காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1400 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டனர்.
தற்போதும் அதே போன்று ஒபாமா 2 வது முறையாக வெற்றி பெற்றதும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு வளயத்திற்கு அமெரிக்கா நிதி
இஸ்ரேல் தனது நாட்டை பாதுக்காத்து கொள்ள ”Iron Dome rocket-defense system” என்ற பாதுகாப்பு வளையத்தை வானில் உருவாக்கி வைத்துள்ளது. ராக்கிட்டுகள் தாக்கினாலும் அதை இந்த Iron Dome தடுத்து விடும். இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களில் இது தற்போது வானில் நிறுவப்பட்டுள்ளது.
விசயம் என்னவெனில் இதை உருவாக்க ஒபாமா அரசு தான் பொருளதார உதவி செய்துள்ளது கடந்த 2010 ஆண்டும் இந்த ஆண்டும் சேர்த்து மொத்ததம் 275 மில்லியன் டாலரை (ஒரு மில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட 5.5 கோடி இந்திய ரூபாய்) இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஒபாமா அரசு கொடுத்துள்ளது.
தற்போது இஸ்ரெலின் கொடூரமாண தாக்குதலுக்கு இந்த பாதுகாப்பு வளையம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு வளையத்தினால் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இஸ்ரேல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது.
ஹிலாரியன் கருத்து
காசா மீதான தாக்குல் குறித்து மற்ற நாட்டு தலைவர்களிடம் மானங்கெட்ட ஹிலாரி பேசுகையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக ஹமாஸ் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஹமாஸ் தாக்குதலை நிறுத்தினால் தான் சுமூக நிலை திரும்பும் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஹிலாரி,  தனது நாட்டை பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது எனவும் மற்ற நாட்டு தலைவர்களிம் பேசும் போது சுட்டிகாட்டியுள்ளார்.
ஒபாமாவின் கருத்து
தற்போது சுற்று பயணத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாவும் இதே பொன்று பேங்காக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒபாமா கூறுகையில் , தனது நாடு ஏவுகணைகளால் தாக்கப்படக் கூடாது என்று இஸ்ரேல் நினைப்பதற்கு எல்லாவித உரிமையும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் காசா மீது ராணுவ தாக்குதல் நடத்தாமல்  இஸ்ரேல் இதை செய்வது விரும்பக்கதது எனவும் ஒபாமா கூறியுள்ளார்.
”அமெரிக்க பக்க பலகமாக உள்ளது” அமெரிக்க நாட்டின் இஸ்ரேல் தூதர்
இரண்டாவதாக ஒபாமா கூறி இருப்பது உலக மக்களை ஏமாற்றுதற்கு என்ற உண்மை அமெரிக்க நாட்டின் இஸ்ரேல் தூதர் Michael Oren தற்போது  அளித்துள்ள பேட்டியில் தெளிவாகியுள்ளது.
அமெரிக்காவின் இரண்டு கட்சியும் இஸ்ரேலின் காசா தாக்குதலுக்கு பெரும்பான்மையான ஆதரவு அளித்து தீர்மானம் கொண்டுவந்துள்ளது.  எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ள அமெரிக்கா எங்களுக்கு முழு உதவி செய்து வருகின்றது.  வொயிட் ஹவுஸ் , காங்கிரஸ் உள்பட அமெரிக்காவின் அனைத்து  தரப்பு அரசு துறைகளிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு தருகின்றது.
மேற்கண்டாவாறு இஸ்ரேல் நாட்டின் வாஷிங்டன் அமெரிக்க தூதரர் பேட்டியளித்துள்ளார்.
அவர் பேட்டியின் முழு வீடியோ காண
அமெரிக்காவின் இரண்டு கட்சியும் இஸ்ரேலுக்கு உதவ தீர்மானம்
அமெரிக்காவின் இரண்டு  கட்சியும் சேர்ந்து உள்ளுக்குள் தீர்மானம் போட்டுக் கொண்டு காசாவை தாக்க இஸ்ரேலுக்கு  பக்க பலமாக இருந்து வருகின்றது.
தற்போது இஸ்ரேல் பயன்படுத்தும் பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்காவின் பெயர் இடம் பெற்றுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் நாடகம் தற்போது வெட்ட வெளிச்சாமாகியுள்ளது.
பொறுத்திருந்த ஒபாமா
அதிபர் தேர்தலுக்கு முன் செய்தால் அது தேர்தலை பாதிக்கும் என்பதற்காக ஒபாமா பொருத்து இருந்து அவர் வெற்றி பெற்றதும் கண்ணைகாட்டியவுடன் இஸ்ரேல் அமெரிக்காவின் முழு உதவியோடு தனது கொடுஞ்செயலை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா
அமெரிக்கா மட்டுமல்லாமல் ஆஸ்த்திரேலிய நாடும் இதற்கு ஆதவு அளித்து வருகின்றது, ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Bob Carr , ஹாமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்க தக்கது எனக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மவுனம் காத்து ஆதரவு அளித்து வருகின்றது.
காசாவிற்கு உதவிக் கரணம் நீட்டிய ஈரான் அதிபர்
எனினும் உலகமே ஒன்று சேர்ந்து பிஞ்சு குழந்தைகள் , அப்பாவி பொதுமக்களை குண்டு வீதி தாக்கி கொன்று குவிப்பதற்கு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் ஈரான் நாட்டு அதிபர் Mahmoud Ahmadinejad 150 டன் எடைகொண்ட கார்கோ கப்பலை காசாவிற்கு கடந்த ஞாயிற்றுகிழமை அனுப்பியுள்ளார்.
அதில் 270 உயர் ரக ஏவுகணைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 85 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய  Fajar-5 என்ற புது ரக ஏவுகணைகளும் இடம் பெற்றுள்ளது.
தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர எகிப்து நாடு இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
கண்டிக்க தக்கது
காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி பிஞ்சு குழந்தைகளை கொன்று குவிப்பதை  அமெரிக்க போன்ற எந்த நாடுகளும் கண்டிக்கவில்லை.  மாறாக ஹமாஸ் அமைப்பை குற்றம் சாட்டி இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகின்றது.
111 நபர்கள் இதுவரை அநியமாக கொள்ளப்பட்டு இருப்பது எவரது கண்ணுக்கும் அநியாயமாக தெரியவில்லையா ? அல்லது அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களுக்கு அது நியாயமாகபடுகின்றதா?
அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டிக்க திராணி இல்லாதவாகள் ஹாமஸ் இயக்கதை கூறை கூறுகின்றனர்.
இஸ்ரேலுக்கு தனது நாட்டை பாதுகாக்க உரிமை இருக்கின்றதாம் ஆனால் பாலஸ்தீனத்திற்கு தனது நாட்டை பாதுகாக்க உரிமை கிடையாது , இஸ்ரேல் என்ன செய்தாலும் பாலஸ்தீனம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்துக்கள் மிகவும் அநியாயமானதாகும்,  மிகவும் கண்டிக்க தக்கதாகும்.
 தகவல் - டிஎன்டிஜெ.நெட்
 

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்