
இந்த ரமலான் மாதத்திலும் கடந்த வருடங்களை போன்றே இஃப்தார் ஏற்பாடுகள் மற்றும் அதை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடைபெறுகிறது.
இந்த வருட ரமலான் மாத முதல் வாரத்தை ஏகத்துவத்தைப் பற்றிப் பிடிப்போம் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகிறது.
- குர் ஆனுக்கு கட்டுப்படுவோம்
- நபிமொழிகளுக்கு கட்டுப்படுவோம்
- மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்
- நபித்தோழர்களை பின்பற்றலாமா?
- மார்க்கமா? உறவா?
- முன்னோர்களை பின்பற்றலாமா?
- மனிதர்களா? மார்க்கமா?

ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.
இந்த மேற்கூறப்பட்ட தலைப்புகளில் முதல் நான்கு நோன்பு முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள தலைப்புகளில் எதிர்வரக்கூடிய நாட்களில் உரை நிகழ்த்துவார்கள்.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment