Saturday, July 28, 2012

ரமாளான் 2012 - முதல் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். 

அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (26-ஜூலை-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல பேச்சாளர்கள் சகோ. திருச்சி மொய்தீன் அவர்கள் அலட்ச்சியப் படுத்தப்படும் தூக்கம் என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோ. வடகரை ஜெய்லானி அவர்கள் கிடைக்காத மற்றுமொரு வாய்ப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

இவர்களின் உரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. முஹம்மது சலீம் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


இதில் சகோதரர் அவர்கள் நாம் மறுமையை வெல்ல வேண்டுமென்றால், நமது முயற்சியை பொறுத்து தான் அமைகிறது என்பதை மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.


இவர்களின் இந்த உரையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை எத்தி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக கேள்வி இங்கே பதில் எங்கே? என்ற தலைப்பில், சகோதரர் அவர்கள் சில கேள்விகளை கேட்டு அதை மக்கள் மத்தியிலிருந்து பதில் பெற்று அது குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி சரியானாதா என்பதை விளக்கினார்கள். 


இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளாவன,

இஸ்லாத்தில் 786 என்பது என்ன? அது அனுமதிக்கப்பட்டதா?


பெண்கள் பள்ளி, பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற விஷயங்களில் பங்கு கொள்ளலாமா?


தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை எப்படி விளங்கிக்கொள்வது?


மற்றும் சில கேள்விகளை கேட்டு, மக்களின் கருத்துகளை பரிசிலித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார்கள்.


இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுமார் அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்