Tuesday, January 14, 2014

ஜனவரி 28 சிறை செல்ல்லும் போராட்டம்


இட ஒதுக்கீடு ஓர் ஃப்ளாஷ்பேக்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.

வீடு வாசல்கள்நில புலன்கள்ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர். 

அவ்வாறு சென்றவர்களில் (வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல்) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும்,சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்துதங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஷ்டமான வேலைகளை செய்து வந்தனர்உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலைசெய்து கொண்டிருக்கும்பொழுது ஜவாஸாத்தில் (லேபர் செக்கிங்கில்) மாட்டிக் கொள்பவர்களை சிறையில் அடைக்கப்பட்டு அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பப்படும்  பரிதாப நிலை. இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக, சில ஸ்டாம்பிங்குகளுக்காக (அந்நிய செலாவனிக்காக) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம்.

பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல்பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும்தொலைபேசி வாயிலாகவும்,அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாயமற்றும்  மார்க்க விளக்கக் கூட்டங்களில் அதன் அமைப்பாளர் சகோ: பி.ஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரைமாநில,மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல், கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.  

மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.

ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர். 
  
பாட்டுக் கச்சேரிகள்கரகாட்டங்கள்போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாயமற்றும் மார்க்க   உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.  

இவ்வாறாக.

·      அரசியல் மேடைகள்,
·       ஆன்மீக மேடைகள்,
·       தெருமுணைக் கூட்டங்கள்,
·       ஜூம்ஆ உரைகள் 
எநகர்புறம் முதல், கிராமப் புறங்கள் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு வழிப்புணர்வு பிரச்சாரங்கள் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.  

தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும்வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரைசாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக்கொண்டும்தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.

சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஷ்டம் நிலவும் கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில்,பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,



மெரீனா மூழ்கியது.
1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்கள் திரண்டு சென்று மெரீனாவை மூழ்கடித்தனர், மெரீனா கடல்கரை இருந்த இடம் தெரியாத அளவுக்கு தாடி வைத்த தவ்ஹீத் வாதிகளின் தலைகளால் பல மணி நேரம் தொலைந்தேப் போனது. 
அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது ) 

தஞ்சைத் திணறியது.
அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்துதிலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது.  

இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு முஸ்லீம்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில்மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர். 
குடந்தைகுலுங்கியது.  
இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம். 
இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டுகமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. 

தமிழகம் திணறியது தொடர் முழக்கப் போராட்டங்களால்.   
அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும்.

போராட்டம் இது போராட்டம்,

TNTJ  நடத்தும் போராட்டம்,

ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,

இடஒதுக்கீடுப் பெறும் வரை,

ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்

எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும்தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு  மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். 

திணறியது தீவுத்திடல்.

சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்விமற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்தியமாநில அரசுப் பணிகளில்கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும்காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம்15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ அழைப்பு விடுத்திருந்தது. 

அதனடிப்படையில் ஜூலை 4 அன்று.15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் தீவுத்திடல் திணறியது.        தீவுத்திடலில் அலை கடலென மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது. 
  
மத்திய அமைச்சர் ஹாரூன் ஓடி வந்தார் கல்விமற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தார்பிரதமர் அதனடிப்படையில் செய்த தருவதாக வாக்களித்தார்.

அத்துடன் வாக்கறுதியை மறந்தார்அல்லது செய்து தர மறுத்தார் அதனால் வருகின்ற ஜனவரி 28ம் தேதி தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இட ஒதுக்கீடு போராட்டத்தை வீரியமாக நடத்த தயாராகுங்கள். அதற்கு முன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள்

...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16

கல்விமற்றும் அரசு வேலை வாய்ப்புகளில்இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும்,  அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும். இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,

·         வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை,
·        எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை,
ஒரு வேளை உணவையும்
இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை,
·        
குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை
மாற்ற முடியாது. 
   
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையை படிக்க  http://www.tntj.net/?p=12863 .






0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்